தலைக்கு சாயம் பூச ரூ.55 லட்சம் செலவு செய்து தயாரிப்பாளரை தலைசுற்ற வைத்த கத்ரீனா

imageஇந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைப் தற்போது அபிஷேக் கபூர் இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், ஜோடியாக ‘ஃபித்தூர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தபுவும் நடித்துள்ளார்.

அடுத்த மாதம் இப்படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் கத்ரீனா சிவப்பு நிறத்திலான தலைமுடியோடு நடித்துள்ளாராம். இதற்காக முடியை சிவப்பு நிறமாக்கும் நிபுணர்களை தேடி வந்த கத்ரீனாவுக்கு மும்பையில் அதற்கான நிபுணர்கள் இல்லாத நிலையில், லண்டனுக்கு பயணம் செய்து தனது தலைமுடியின் நிறத்தை மாற்றியுள்ளார்.

இதற்காக லண்டனுக்கு ஒவ்வொரு முறையும் தயாரிப்பாளர் செலவில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டில் பயணம் செய்துள்ளார்.

அங்கு ஒவ்வொரு முறையும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். மேலும், இவர் ஒவ்வொரு முறை செல்லும்போதும் தன்னுடைய மேனேஜரையும் கூடவே அழைத்துச் சென்றுள்ளார். இதற்கான செலவையும் தயாரிப்பாளர் தரப்பே செய்துள்ளது.

இப்படியாக அவருடைய தலைமுடியை சிவப்பு நிறத்துக்கு மாற்றுவதற்கு மட்டும் கணக்கிட்டு பார்த்தால் ரூ.55 லட்சம் செலவாகியுள்ளதாம். இந்த பில்லை பார்த்ததும் தயாரிப்பாளரே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாராம்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries