ராஜகுமாரனுக்கு வில்லனாக மாறிய பரத்

Bharath-pins-hope-on-Killadi‘கோலி சோடா’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த விஜய் மில்டன், அதன் பிறகு விக்ரமை வைத்து ’10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

அடுத்ததாக விஜய் மில்டன், டி.ராஜேந்தரை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் டி.ராஜேந்தர் நாயகனாக நடிக்கவிருந்த அப்படத்தில் தற்போது நாயகனாக ராஜகுமாரன் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை தேவயானியின் கணவரான ராஜகுமாரன் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்த புதிய படத்தில் ராஜகுமாரனுக்கு வில்லனாக பரத் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ‘செல்லமே’ படத்தில் பரத் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது வில்லனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries