சேதுபதி ரிலீஸ் தேதி அறிவிப்பு

14MP_sethupathi_2__2583102fவிஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சேதுபதி’. இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். அருண்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை மதுரை மாநகரில் ஒரே கட்டமாக நடத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது படக்குழுவினர் படத்தை பிப்ரவரி 19ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான ‘காதலும் கடந்து போகும்’ படம் பிப்ரவரி 12ம் தேதி வெளியாகவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online