ஈரம் இயக்குனருடன் கைகோர்க்கும் அருண் விஜய்

Arun-vijay‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் ‘புரூஸ் லீ’ படத்தில் வில்லனாக நடித்தார். இந்நிலையில் வில்லன் வேடத்தை கைவிட்டு தற்போது ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இவர் அடுத்ததாக ‘ஈரம்’, ‘வல்லினம்’ படத்தை இயக்கிய அறிவழகன் படத்தில் நடிக்க இருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன், திரில்லர் பாணியில் உருவாகும் இப்படம் அருண் விஜய்க்கு பேர் சொல்லும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிழகன் இயக்கத்தில் தற்போது ‘ஆறாவது சினம்’ என்னும் படம் வெளியாகவுள்ளது. இதில் அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் மலையாலத்தில் வெற்றி பெற்ற ‘மெமரீஸ்’ படத்தின் ரீமேக்காகும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries