என்னை விமர்சிப்பவர்கள் பற்றி கவலை இல்லை: அனுபம் கெர்

anupamkherஇந்தி நடிகர் அனுபம் கெருக்கு சமீபத்தில் மத்திய அரசு சார்பில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இவர் ஆளும் பா.ஜனதா அரசுக்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு விருது அறிவிக்கப்பட்டது என்று கூறி பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தன் மேல் எழும் விமர்சனங்கள் குறித்து நடிகர் அனுபம் கெர் தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என்னை விமர்சிப்பவர்கள் குறித்து எனக்கு கவலையில்லை. பா.ஜனதா கட்சி தான் இந்த விருதை வழங்குகிறது என்று நினைக்கிறார்கள். தோல்வியில் துவண்டுபோனவர்களிடம் மட்டுமே இதுபோன்ற நடத்தையை பார்க்கமுடியும்.

வெற்றியாளர்கள் இப்படி நடந்துகொள்ளமாட்டார்கள். பிரபலமில்லாதவர்கள் கூட என்னை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து அவர்களுக்கு பெயரை தேடிக்கொள்கிறார்கள்.

இவ்வாறு அனுபம் கெர் தெரிவித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online