பிரசாந்த் படத்தின் தலைப்பு மாற்றம்

Prashanth-Stillsநீண்ட இடைவெளிக்கு பின் பிரசாந்த் நடித்து வரும் படம் ‘சாஹசம்’. இதில் இவருக்கு ஜோடியாக அமண்டா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நாசர், தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர், ஜான்விஜய், ரோபோசங்கர், தேவதர்ஷினி, லீமாபாபு உள்ளிட்ட பல பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.

இதுவரை ‘சாஹசம்’ என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தி முடித்து, பிப்ரவரி 5-ம்தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பை மாற்றியிருக்கின்றனர். அதாவது ‘சாஹசம்’ என்ற தலைப்பை ‘சாகசம் என்ற வீரச்செயல்’ என்று மாற்றியிருக்கிறார்கள்.

‘சாஹசம்’ என்ற தலைப்பு தமிழ்ப்பெயரா? என்ற பிரச்சனை வர காரணம் இருப்பதால் தமிழக அரசின் வரிவிலக்கு பெறுவதற்காக ‘சாகசம் என்ற வீரச்செயல்’ என்று மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை அருண்ராஜ் வர்மா இயக்கியுள்ளார். தியாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online