சமூக வலைதளம் மீது டைரக்டர் தாசரி நாராயணராவ் புகா

rao-croppedபிரபல இயக்குனரும், முன்னாள் மத்திய மந்திரியுமான தாசரி நாராயணராவ் வீடு ஐதராபாத்தில் உள்ளது. இவர் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

புகாரில், ‘‘சில சமூக வலைதளங்களில் நான் கடந்த 1 மாதம் முன்பே இறந்து விட்டதாக தவறான பிரசாரம் செய்து வருகிறது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

புகாரை பெற்றுக் கொண்டு வழக்குப்பதிவு செய்த ஜூப்ளி ஹில்ஸ் இன்ஸ்பெக்டர் சாமல வெங்கட் ரெட்டி, ‘‘புகார் மனு சைபர் கிரைம் போலீசுக்கு அனுப்பப்பட்டு விசாரிக்கப்படும்’’ என்றார்.

இதுகுறித்து தாசரி நாராயணராவ் கூறுகையில், நான் உங்களோடு இருக்கும் போதே இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் பரப்புகிறார்கள்.

இதனால் பலர் எனக்கு டெலிபோன் செய்து விசாரிக்கிறார்கள். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. நல்ல காரியத்துக்கு பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் இதுபோன்ற தவறான பிரசாரம் செய்வது வேதனை அளிக்கிறது’’ என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries