சிசிஎல் கிரிக்கெட்: விக்ராந்த் அதிரடி சாதனை

16_MP_VIKRANTH_658592gஒவ்வொரு ஆண்டும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி இந்த வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் அணியும் தெலுங்கு வாரியர்ஸ் அணியும் கொச்சி மைதானத்தில் மோதியது. முதலில் டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் அசோக் செல்வனும், விக்ராந்தும் களம் இறங்கினர். இதில் அசோக் செல்வன் 1 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

பின்னர் களம் இறங்கிய விஷ்ணு 16 ரன்களிலும், சாந்தனு 24 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்கள். ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் இழந்தாலும், மறு பக்கம் விக்ராந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

இவர் 64 பந்துக்களில் 100 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடித்திருந்தார். சென்னை அணி மொத்தம் 20 ஓவர் முடிவில் 164 ரன்களை எடுத்துள்ளது. இதை தொடர்ந்து தெலுங்கு வாரியர்ஸ் தன் பேட்டிங்கை தொடங்கவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online