மாதவன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ்-இந்தி என வெவ்வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் நடித்து, ஒரே நாளில் வெளிவந்த படம் ‘இறுதிச்சுற்று’. பாக்சிங்கில் உள்ள அரசியல்களையும், பாக்சராக முன்னேற இருக்கும் தடைகளையும் அக்குவேறு ஆணிவேராக அம்பலப்படுத்தியது இந்த படம். இந்த படம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த படம் முதல் மூன்று நாட்களில் ரூ.4 கோடி வசூலித்துள்ளது. இந்த வசூல் தமிழ்நாட்டில் மட்டும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதுவரை கணக்கிடப்படவில்லை. இருப்பினும், நல்ல கணிசமான வசூலை பெற்றிருக்கும் என படக்குழு வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இப்படத்தில் மாதவனுடன் ரித்திகா சிங், சோனர் சொர்க்கார், நாசர், ராதாரவி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சுதா கொங்காரா பிரசாத் என்ற பெண் இயக்குனர் இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.