படப்பிடிப்பில் ஜீவா – சிபிராஜ் மோதலால் பரபரப்பு

pokkiri-raja-2016ஜீவா–ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம் ‘போக்கிரிராஜா’. இதில் இன்னொரு நாயகனாக சிபிராஜ் நடிக்கிறார். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் இந்த படத்தில் முனிஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு முதல் கட்டமாக புதுச்சேரியில் நடந்தது. அப்போது ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட ஹன்சிகாவை ஜீவா, சிபிராஜ் இருவரும் சேர்ந்து மீட்டு அனுப்பி வைத்தனர். தற்போது மகாபலிபுரத்தில் படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

நேற்று ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் பயிற்சி அளிக்க ஜீவா, சிபிராஜ் இருவரும் மோதிக் கொள்வது போன்ற காட்சி படமானது. இருவரும் தங்கள் திறமையை நிரூபிக்கும் வகையில் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருந்தனர்.

ஒருவருடன் ஒருவர் மோதும்போது எதிர்பாராதவிதமாக ஒருவருக்கு அடி விழுந்தது. இதையடுத்து இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. வாக்குவாதம் முற்றியதால் ஜீவாவும், சிபியும் உண்மையாகவே மோதும் நிலை உருவானது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இயக்குனர், சண்டை பயிற்சியாளர் மற்றும் படக்குழுவினர் இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயன்றனர். என்றாலும் வாக்குவாதம் நீடித்தது. நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் சமாதானம் ஆனார்கள். ‘மச்சி’ என்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த எதிர்பாராத சம்பவத்தில் படப்பிடிப்பு 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இந்த படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார். ‘போக்கிரிராஜா’ படத்தின் ‘டீஸர்’ இன்று வெளியாகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online