காரைக்குடியில் முகாமிட்டுள்ள எஸ்3

Singam-3சூர்யா-ஹரி கூட்டணியில் தற்போது ‘எஸ்.3’ என்ற படம் உருவாகி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் விசாகப்பட்டணத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

இதையடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்றுமுதல் காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. காரைக்குடியில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்தி முடித்துவிட்டு, சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மேலும், ‘சிங்கம்’ இரண்டு பாகங்களிலும் நடித்த அனுஷ்காவும் நடிக்கிறார். சூரி, பாடகர் கிரிஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த வருடத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online