புலி கூட்டணி மீண்டும் இணைகிறது

CMxt23SUAAA2W2gவிஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கிய ‘புலி’ படம் கடந்த வருடம் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். கவிஞர் வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்.

இந்நிலையில், விஜய் நடிக்கும் 60-வது படத்திற்கும் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்துவே பாடல்களை எழுதவுள்ளார்.

விஜய் தற்போது தனது 59-வது படமான ‘தெறி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு 60-வது படமாக ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் இடம்பெறும் 5 பாடல்களையும் வைரமுத்துவே எழுதவுள்ளார். ‘புலி’ படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்-வைரமுத்து கூட்டணி மீண்டும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்னும் ஒருசில வாரங்களில் இந்த படம் குறித்த அனைத்து தகவல்களும் உறுதியாகும் என தெரிகிறது.

தற்போது இந்த படத்திற்கான வசனங்கள் மற்றும் லொக்கேஷன் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online