ஆந்திராவிற்கு செல்லும் வேதாளம்

Vedhalam1அஜித் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் ‘வேதாளம்’. இதில் அஜித்துடன் ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், தம்பி ராமையா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்தார்.

இதில் அஜித் டாக்சி டிரைவராகவும், ரவுடியாகவும் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் அண்ணன், தங்கை சென்டிமென்ட் அதிகம் பேசப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படம் வெற்றி பெற்றதையடுத்து பல மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் காண்பித்து வருகிறார்கள்.

சமீபத்தில் புனித் ராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக்காக இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் தெலுங்கில் பவன் கல்யாணை ஹீரோவாக வைத்து இப்படத்தை ரீமேக்க செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online