லாரன்ஸுக்கு அப்பாவாக நடிக்கும் சத்யராஜ்

raghava-lawrence-with-sathyarajராகவா லாரன்சின் ‘காஞ்சனா’ படத்தை தொடர்ந்து ‘காஞ்சனா–2’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. ராகவா லாரன்ஸ் தற்போது ‘பைரவா’, ‘நாகா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

காஞ்சனா படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்தார். இப்போது ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் ‘பைரவா’ படத்தில் அவரது அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். இதுவும் முக்கியமான வேடம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ‘கெத்து’ படத்தில் உதயநிதியின் அப்பாவாக சத்யராஜ் நடித்தார். ‘பாகுபலி’ படத்தில் பேசப்பட்ட சத்யராஜ் ‘பாகுபலி – 2’ படத்திலும் நடிக்கிறார். இப்போது, ராகவா லாரன்சுடன் சத்யராஜ் நடிப்பதால் ‘பைரவா’ படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries