ஜீவாவின் போக்கிரி ராஜா ரிலீஸ் தேதி அறிவிப்பு

pokiri-rajaஜீவாவின் நடிப்பில் கடைசியாக ‘யான்’ படம் வெளியானது. இப்படத்திற்குப் பிறகு ஜீவாவின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு எந்த படமும் வெளியாகாததால் அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தார்கள்.

தற்போது ரசிகர்கள் விருந்து படைக்கும் வகையில் ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘போக்கிரி ராஜா’, ‘திருநாள்’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

இதில் முதலாவதாக ‘போக்கிரி ராஜா’ படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ‘போக்கிரி ராஜா’ படத்தை இம்மாதம் 26-ம்தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். மேலும் சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

விஜய்யின் ‘புலி’ படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இந்த படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online