முதன்முறையாக வேறொரு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் உதயநிதி

Udhayanidhiஉதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ முதல் கடைசியாக அவர் நடித்த ‘கெத்து’ படம் வரை அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனமே தயாரித்திருந்தது.

அதுமட்டுமில்லாமல், தற்போது இவர் நடித்து வரும் ‘மனிதன்’, இனிமேல் நடிக்கவிருக்கும் சுசீந்திரன் இயக்கும் புதிய படம் ஆகிய படங்களையும் உதயநிதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமே தயாரிக்கிறார்.

ஆனால், தற்போது முதன்முறையாக வேறொரு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி நடிக்கவிருக்கிறார். அதாவது, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் இயக்குனர் யார்? என்பது இதுவரை வெளியிடப்படவில்லை. படப்பிடிப்பை ஜூலை மாதத்தில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online