மலேசியாவை அதிர வைத்த நட்சத்திரங்கள்

hqdefault (1)மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். மேலும் நிறைய தமிழ் படங்கள் அங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகர்கள் பலர் அங்கு படப்பிடிப்புக்காக முகாமிட்டிருக்கிறார்கள்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடந்து வருகிறது. அதுபோல் விக்ரம், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இருமுகன்’ படப்பிடிப்பும் அங்குதான் நடந்து வருகிறது. மேலும் ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா நடிக்கும் ‘எஸ்3’ படப்பிடிப்பும் அங்கு நடக்கிறது.

இதற்காக ரஜினி, விக்ரம், சூர்யா ஆகியோர் மலேசியாவிற்கு சென்றுள்ளனர். இதையறிந்த ரசிகர்கள் நடிகர்களுக்கு கோலாகல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online