டீசர் வெளிவரும் முன்பே டப்பிங்கை முடித்த ராதிகா

Radikaa-Sarathkumarவிஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் டப்பிங் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்காக கடந்த சில நாட்களாக டப்பிங் பேசி வந்த ராதிகா, தற்போது அவருக்கான டப்பிங் முழுவதையும் பேசி முடித்துவிட்டாராம். இவரைத் தொடர்ந்து படத்தில் நடித்த மற்றவர்களின் டப்பிங் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், ‘தெறி’ டீசர் இன்று நள்ளிரவு வெளியாகவிருக்கிறது. இந்த டீசரை வரவேற்க விஜய் ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ‘தெறி’ படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிரபு, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். தமிழ் புத்தாண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries