விக்ரம், அஜித்தை மிஞ்சுவாரா விஜய்?

Theri-Teaser-Feb-5-600x300விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தெறி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைப்பது இது 50வது படமாகும். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் டீசர் பொங்கல், குடியரசு தினம் ஆகிய நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசியாக பிப்ரவரி 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று நள்ளிரவு வெளியாகும் டீசரை விஜய் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரை ‘தெறி’ டீசர் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஐ’ படத்தின் டீசர் தான் அதிக பார்வையாளர்கள் கொண்டுள்ளது. அதாவது 1 கோடியே 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கிறார்கள். அதுபோல் அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ டீசரை 1.4 லட்சம் பேர் லைக் செய்திருக்கிறார்கள்.

இதுவே சாதனையாக கூறப்படுகிறது. இந்த சாதனையை விஜய்யின் ‘தெறி’ டீசர் முறியடிக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries