கெத்து படத்துக்கு வரிச்சலுகை கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

gethuஉதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கெத்து’ என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை வழங்க தமிழக அரசு மறுத்து, கடந்த ஜனவரி 14-ந் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து கெத்து திரைப்படத்தை தயாரித்த ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.துரைசாமி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries