நெல்லையில் சிங்கம்–3 படப்பிடிப்பு

hqdefault (1)நெல்லை பகுதியில் படப்பிடிப்பு நடத்திய ‘சிங்கம்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து டைரக்டர் ஹரி, சூர்யா– அனுஷ்கா நடித்த ‘சிங்கம்–2’ படத்தை இயக்கினார். இந்த படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து கதாநாயகனாக சூர்யா, கதாநாயகியாக அனுஷ்கா நடிக்க ‘சிங்கம்–3’ படத்தை டைரக்டர் ஹரி இயக்கி வருகிறார். ‘சிங்கம்–1’ படத்தில் நெல்லை ரெட்டியார்பட்டி மலையில் உள்ள 4 வழிச்சாலையில் சில காட்சிகள் இடம் பெற்றது.

அதே போல் ‘சிங்கம்–3’ படத்திலும் ரெட்டியார்பட்டி மலையில் உள்ள 4 வழிச்சாலையில் நடிகர் சூர்யா கார் ரேசில் செல்வது போலவும், அவர் அனுஷ்காவுடன் காரில் ‘டூயட்’ பாடுவது போன்றும் காட்சிகள் எடுக்கப்பட்டது.

படப்பிடிப்பை பார்க்க ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries