நையப்புடை படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறேன்: எஸ்.ஏ.சந்திரசேகரன்

TH-S_A_CHANDRASEKA_2227182fபாரதியாரின் கவிதை வரியான ‘நையப்புடை’ என்ற தலைப்பில் உருவாகி வரும் படத்தின் கதை நாயகனாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். இதில் 75 வயது முதியவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவர், அந்த வயதில் உள்ள ஒரு முதியவரின் ஏக்கங்கள், தாகங்கள், சேட்டைகள், கோபம், குழந்தைத்தனம் ஆகிய குணாதிசயங்களை காட்டி இருக்கிறார்.

இந்த படத்தின் இன்னொரு நாயகனாக கவிஞர் பா.விஜய் நடித்திருக்கிறார். அவரது ஜோடி சாந்தினி. ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் தாதாவாக நகைச்சுவை கலந்து நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் இயக்குனராக அறிமுகம் ஆகும் விஜய்கிரனுக்கு 19 வயதுதான் ஆகிறது. ஒளிப்பதிவு ஜீவன். இசை–தாஜ்நூர், வி.கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் ‘டீஸர்’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தைப் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறும்போது, “நான் 70 படங்களை இயக்கி விட்டேன். ஓய்வு பெறலாம் என நினைத்தபோது நடிகனாக இந்த வாய்ப்பு நண்பர் தாணு மூலமாக கிடைத்திருக்கிறது. நான் இயக்கிய முதல் படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’.

அந்தப் படம் வெளியாகும் போது ஒரு இயக்குனராக வெற்றி பெற வேண்டும் என்ற ஏக்கமும் துடிப்பும் எனக்குள் எப்படி இருந்ததோ அதே மனநிலையில் ஒரு நடிகனாக வெற்றி பெற வேண்டும் என இந்தப் படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறேன்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online