திரிஷாவுக்கு திருமணம் எப்போது? அவரே அளித்த பதில்

Trisha Krishnan Amrapali jewellery bracelet for Lion Audio launchநடிகை திரிஷா ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி: பேய் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறீர்களே?

பதில்: கவர்ச்சி கதாபாத்திரங்களில் வந்து போரடித்து விட்டது. ஒரே மாதிரி நடிப்பதை ரசிகர்களும் விரும்பமாட்டார்கள். வித்தியாசமாக வர ஆசைப்பட்டேன்.

பேய்க்கதைகளிலும் விருப்பம் இருந்தது. அப்போதுதான் அரண்மனை-2 படத்தின் வாய்ப்பு வந்தது. சம்மதம் சொன்னேன். என் நடிப்பை பார்த்து நிறைய பாராட்டுகள் வருகின்றன.

கேள்வி: நடிகைகள் மத்தியில் போட்டி நிலவுகிறதே?

பதில்: நடிகைகளுக்குள் போட்டி இருப்பது சகஜம். ஆனாலும் திறமையை பொறுத்தே பட வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு போட்டியை பார்த்து எப்போதுமே பயம் வந்தது இல்லை. அரண்மனை-2 படத்தில் நடித்த போது எனக்கும் ஹன்சிகாவுக்கும் சண்டை நடந்ததாக கிசுகிசுக்கள் வந்தன. அதை பார்த்து இருவரும் சிரித்துக்கொண்டோம். நாங்கள் நெருங்கிய தோழியாகவே இருந்தோம். எங்களுக்குள் எந்த தகராறும் நடக்கவில்லை.

கேள்வி: நீங்கள் நடிக்கும் படத்தின் கதையை தேர்வு செய்வது யார்?

பதில்: என்னுடைய கதைகளை நான் தான் தேர்வு செய்கிறேன். சில நேரம் குறிப்பிட்ட கதையில் நடிப்பதா? வேண்டாமா? என்று குழப்பம் வரும். அப்போது எனது அம்மாவிடம் யோசனை கேட்பேன். ஆனாலும் இறுதியான முடிவை நான் தான் எடுப்பேன்.

கேள்வி: சினிமாவை தவிர்த்து எதிர்காலத்தில் ஏதேனும் செய்ய ஆசை இருக்கிறதா?

பதில்: நான் சாப்பாட்டு பிரியை. எனவே எதிர்காலத்தில் ஒரு ஓட்டல் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது.

கேள்வி: திருமணம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் சிலருக்கு சந்தோஷத்தை தரும். சிலருக்கு துக்கத்தை தரும். திருமண விஷயத்தில் என் வாழ்க்கையில் நான் இரண்டாவதாக சொன்னதுதான் நடந்தது. அதனால் இப்போது திருமணம்பற்றி யோசிப்பதே இல்லை. அதற்காக நடந்ததுபற்றியும் சிந்திக்க மாட்டேன்.

கேள்வி: திருமணமே வேண்டாம் என்று இருக்கப்போகிறீர்களா?

பதில்: அப்படி இல்லை. பொருத்தமானவர் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு தகுதியான மாப்பிள்ளை யார் என்பதை முடிவு செய்வது என்னை விட என் அம்மாவுக்கே நன்றாக தெரியும். எனவே திருமண முடிவை அவரிடம் விட்டுவிட்டேன்.

கேள்வி: பேய்கள் இருக்கிறது என்று நம்புகிறீர்களா?

பதில்: பேய்கள் இருக்கிறதா? இல்லையா? என்று எனக்கு தெளிவாக சொல்ல தெரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு அற்புத சக்தி நம் எல்லோரையும் இயக்குகிறது என்று நம்புகிறேன்.

இவ்வாறு திரிஷா கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries