டார்லிங் 2 ரசிகர்களுக்கு டார்லிங்காக இருக்கும்: ஞானவேல் ராஜா

Producer Gnanavel Raja Press Meet on Karthi's Alex Pandian

Producer Gnanavel Raja Press Meet on Karthi’s Alex Pandian

ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாக்கி வந்து ரசிகர்களை மகிழ்விப்பது நல்ல விசயம். அந்த வகையில், சென்ற வருடம் வெளியான படங்களில் வெற்றிப்படமான ‘டார்லிங்’ இணைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக ஏராளமான பொருட்செலவில் உருவான ஒரு படத்தோடு சேர்ந்து திரைக்கு வந்து, டார்லிங் படம் பெருவெற்றியைப் பெற்றது என்பதுதான் அந்த வெற்றிக்கே சிறப்பான ஒரு அம்சம்.

டார்லிங் படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தற்போது ‘டார்லிங் 2’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். ‘ஜின்’ என்ற பெயரில் உருவாகத் துவங்கிய இப்படம் தற்போது ‘டார்லிங் 2’ ஆக வெளியாக இருக்கிறது.

ஜின் எப்படி டார்லிங் 2 ஆனது என்பது குறித்து ஞானவேல் ராஜா கூறும்போது, ‘ஒரு பெயரோடு தொடர் பட வரிசையில் வரும் இரண்டாவது படம் கதையிலோ நடிகர்- நடிகைகளிலோ முதல் படத்துடன் ஒத்துப் போகவேண்டும் என்பது கட்டாயமில்லை. படத்தின் குணாதிசயத்தன்மை ஒன்றாக இருந்தாலே போதும்.

இந்த டார்லிங் 2 படத்தை இயக்கி இருப்பது அறிமுக இயக்குனரான சதீஷ் சந்திர சேகரன். ஐந்து நண்பர்கள் பேய் பிடித்த ஒரு நண்பனோடு சேர்ந்து ஒரு பயணம் போகிறர்கள் என்ற ஒற்றை வரியே என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு காட்சியிலும் திகிலோடு நகைச்சுவையும் பின்னிப் பிணைந்து அமைக்கப்பட்ட திரைக்கதை. இது கண்டிப்பாக வெற்றி பெறும்.

மெட்ராஸ் புகழ் கலையரசன் மற்றும் காளி வெங்கட், அர்ஜுன், முனீஸ்காந்த், ‘மெட்ராஸ்’ ஜானி போன்றவர்களோடு அறிமுகங்களான ரமீஸ் ராஜா மற்றும் மாயா.. என்று திறமை மிக்க கலைஞர்களின் கூட்டணி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

அதோடு ஜின் என்ற பெயரை டார்லிங் -2 என்று மாற்றுவது பற்றிய யோசனை சிறு தயக்கமும் இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அடுத்த மாத துவக்கத்தில் வெளிவர இருக்கும் இந்தப் படம் ரசிகப் பெருமக்களின் டார்லிங் ஆக இருக்கும் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை’ என்கிறார்.

இப்படத்தின் பாடலான ‘மச்சி வாடா நீதான் பிரண்டு…’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் இன்று மாலை வெளியிடுகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online