காதலர் தினத்தில் போக்கிரி ராஜா ஆடியோ வெளியீடு

1ஜீவா – சிபிராஜ்- ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘போக்கிரி ராஜா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே, இப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

‘போக்கிரி ராஜா’ படத்தை பி.டி.செல்வகுமார் பிரம்மாண்டமாக தயாரித்தள்ளார். காஸ்மோ வில்லேஜ் நிறுவனம் சார்பில் சிவா இப்படத்தை வெளியிடுகிறார். பிப்ரவரி 26-ந் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries