காதலும் கடந்து போகும் ரிலீசாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

8x469விஜய்சேதுபதி நடிப்பில் ‘சேதுபதி’, தர்மதுரை’ ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கிறது. இதில், விஜய் சேதுபதி போலீசாக நடித்துள்ள ‘சேதுபதி’ படம் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

சேதுபதி படத்திற்கு முன்னதாக ‘காதலும் கடந்து போகும்’ காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி 12ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், தற்போது மார்ச் 11ம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் மடோனா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நலன்குமாரசாமி இயக்கியுள்ள இந்த படத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries