முதன்முறையாக பேயாக மாறும் ரம்யா கிருஷ்ணன்

Bahabali Ramyaகடந்த வருடம் வெளிவந்த பெரிய அளவில் வெற்றியடைந்த ‘பாகுபலி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் தற்போது இவர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ரம்யா கிருஷ்ணனின் கணவரும், பிரபல தெலுங்கு இயக்குனருமான கிருஷ்ண வம்சி இயக்கும் ‘ருத்ராக்ஷா’ என்ற தெலுங்கு படத்தில் ரம்யா கிருஷ்ணன் பேயாக நடிக்கவிருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் இதுவரை அம்மன், குணச்சித்திரம், வில்லி ஆகிய கதாபாத்திரங்களில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் பேயாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா கிருஷ்ணன் பேயாக நடிக்கவிருக்கும் ‘ருத்ராக்ஷா’ படத்தில் சமந்தா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மேலும், படத்தின் நடிக்கும் பிற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online