டண்டணக்கா பாடல் பிரச்சினைக்கு பிறகு இமான் பாடலை வெளியிடும் டி.ஆர்

01-1409550171-t-rajendar-37-600ஜீவா-ஹன்சிகா-சிபிராஜ் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய படம் ‘போக்கிரி ராஜா’. இப்படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இவருடைய இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை வருகிற காதலர் தினத்தன்று வெளியிடவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும், ‘அத்துவுட்டா அத்துவுட்டா’ என்ற சிங்கிள் பாடலை மட்டும் இன்று வெளியிடவுள்ளனர்.

இந்த பாடலை இன்று மாலை நடைபெறும் விழாவில் டி.ராஜேந்தர் வெளியிடவுள்ளார். ஏற்கெனவே, ‘டண்டணக்கா டண்டணக்கா’ என்ற பாடல் மூலம் டி.ஆருடன் பிரச்சினையில் சிக்கிக் கொண்டவர் டி.இமான், தற்போது அவருடைய இசையில் உருவான ஒரு பாடலை டி.ஆர். வெளியிட முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘போக்கிரி ராஜா’ டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த பாடலும் ரசிகர்கள் பெரிதும் கவரும் படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

ராம்பிரகாஷ் ராயப்பா ஏற்கெனவே ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தை இயக்கியவர். அதுமட்டுமில்லாமல், இப்படம் ஜீவாவுக்கு 25-வது படமாகும். ஜீவா-ஹன்சிகா இணையும் முதல் படம் இது. சிபிராஜ் இப்படத்தில் ஒரு வில்லனாக நடித்துள்ளார்.

இவ்வளவு சிறப்பம்சம்ங்களுடன் உருவாகியுள்ள ‘போக்கிரி ராஜா’ பிப்ரவரி 26-ந் தேதி வெளியாகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries