பாகுபலியில் விசாரணை வில்லன்

visaranai-villain-baahubali-2-08-1454923404தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ படம் கடந்த வாரம் வெளியாகி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்று வருகிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் வாங்கியுள்ள இப்படத்தில் ஆந்திரா போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் அஜய் கோஷ்.

அஜய் கோஷ் ‘விசாரணை’ படத்தில் கைதிகளை விசாரிக்கும் காட்சிகளில் ரொம்பவும் ஆக்ரோஷம் காட்டி நடித்திருப்பார். இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், அஜய் கோஷ் கடந்த வருடம் தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாக வெளிவந்து வெற்றிநடை போட்ட ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் இப்படத்தில் கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் 5 நாட்கள் அஜய் கோஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியதாகவும் கூறப்படுகிறது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மீண்டும் மார்ச் மாதத்தில் படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online