மீண்டும் சுந்தர்.சி படத்தில் பூனம் பஜ்வா

Poonam-Bajwa-Hot-Photos-2014சுந்தர்.சி. இயக்கத்தில் வெளிவந்த ‘ஆம்பள’ படத்தில் பூனம் பஜ்வா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, சுந்தர்.சி தான் இயக்கிய ‘அரண்மனை-2’ படத்தில் பூனம் பஜ்வாவுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைத்திருந்தார். இந்த படத்தில் சுந்தர்.சி.க்கு ஜோடியாகவே பூனம் பஜ்வா நடித்திருந்தார்.

இதையடுத்து, சுந்தர்.சி. நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் பூனம் பஜ்வா அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மலையாளத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘வெள்ளிமூங்கா’ படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருக்கின்றனர். இதில்தான் சுந்தர்.சிக்கு ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை சுந்தர்.சியின் உதவியாளர் வெங்கட் என்பவர் இயக்கவிருக்கிறார். இதில் நடிப்பதோடு, தயாரிப்பு பணியையும் சுந்தர்.சி மேற்கொள்ளவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 11-ந் தேதி திருநெல்வேலியில் தொடங்கவிருக்கிறது. சித்தார்த் விபின் இசையமைக்கவுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online