தெறி படத்தில் இணைந்த ஹிட் கூட்டணி

_01c9fa3c-cbeb-11e5-9f1f-e42e029c5977அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

‘தெறி’ படத்துக்காக ஜி.வி. இசையில் விஜய் இரண்டு பாடல்களை பாடியுள்ளார். மேலும், உத்ரா உன்னிகிருஷ்ணன் ஒரு பாடலும், அறிமுக பாடலை தேவாவும் பாடியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு பாடலை பின்னணி பாடகர் ஹரிஹரனும் பாடியுள்ளாராம். விஜய்-ஹரிஹரன் கூட்டணியில் ஏற்கெனவே ‘நெஞ்சினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘மனசே மனசே’, ‘குஷி’ யில் ‘மொட்டு ஒன்று மலர்ந்திட துடிக்கும்’, ‘உதயா’ படத்தில் ‘உதயா உதயா’, ‘துப்பாக்கி’ படத்தில் ‘குட்டிப்புலி கூட்டம்’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் இந்த பாடலும் ஹிட் வரிசையில் அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

‘தெறி’ படத்தின் ஆடியோ மார்ச் 10-ந் தேதியையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். அட்லி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இந்த டீசரை 5 நாட்களுக்குள் 60 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். ஏப்ரல் 14-ந் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries