தனுஷ் படத்தில் இருந்து ஷாமிலி விலகல்

photos-2016-1-13-3-21-35தனுஷ் தற்போது துரை.செந்தில்குமார் இயக்கும் ‘கொடி’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக திரிஷா, ஷாமிலி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். ‘கொடி’ படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திலிருந்து ஷாமிலி விலகியுள்ளார்.

தனுஷுக்கு கோலிவுட், பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் நடிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. இதனால், தற்போது நடித்துவரும் படங்களை எவ்வளவு சீக்கிரத்தில் முடிக்க முடியுமோ, அந்தளவுக்கு வேகமாக முடித்துவிட்டு ஹாலிவுட் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

ஆகையால், இப்போது இவர் நடித்து வரும் ‘கொடி’ படத்தை கூடிய விரைவில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.

ஆனால், இப்படத்தின் நாயகி ஷாமிலியோ ஏற்கெனவே ஒப்பந்தமான படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால், ‘கொடி’ படக்குழுவினர் கேட்ட தேதிகளை ஒதுக்க முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், படக்குழுவினரிடம் முறையாக கூறிவிட்டு, இப்படத்திலிருந்து அவரே விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. ஷாமிலி தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக ‘வீரசிவாஜி’ படத்தில் நடித்து வருகிறார்.

ஷாமிலி ‘கொடி’ படத்திலிருந்து விலகிக் கொண்டதால், அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் நாயகி மடோனா செபஸ்டியான் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவில் படமாக்கவுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online