அக்ஷய்குமார் நடிக்க இந்தியில் ரீமேக் ஆகிறது விசாரணை

450022-akshay-kumar-newவெற்றிமாறன் இயக்கத்தில் தமிழில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘விசாரணை’. போலீஸ் பிடியில் சிக்கித் தவிக்கும் அப்பாவி இளைஞர்களை பற்றி வெளிவந்த இந்த படம் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாது, திரையுலக பிரபலங்கள் பலரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

இப்படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு சர்வதேச விழாக்களில் கலந்துகொண்டு, பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளது. இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகவிருக்கிறது.

இந்தியில் இப்படத்தின் ரீமேக் உரிமையை பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் வாங்கியுள்ளார். இந்தியில் இப்படத்தை பிரியதர்ஷனே இயக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கவிருக்கிறார்.

அக்ஷய்குமார் தற்போது தமிழில் ரஜினியுடன் இணைந்து ‘2.ஓ’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online