சிபிராஜுடன் மோதல் இல்லை: ஜீவா

Jeeva_Sibiraj_Hansika_Pokkiri_Rajaஜீவா, சிபி, ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘போக்கிரிராஜா’. ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘அத்துவுட்டா…’’ என்ற பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் டி.ராஜேந்தர், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார். அப்போது, டி.ஆர். பேசும்போது, ‘இந்த படத்தில் இடம் பெற்ற’ ‘அத்துவுட்டா….’ பாடலை கேட்டேன். மிகவும் நன்றாக வந்திருக்கிறது. முதலில் இந்த பாடலை என்னை பாடும் படிதான் கேட்டார்கள். அன்றைய சூழ்நிலையில் பாடமறுத்து விட்டேன்.

பெண்கள் ஆண்களை காதலித்து கைவிட்டு விடுவதை இந்த பாடலில் சொல்லி இருக்கிறார்கள். பெண்கள் ‘லுக்’விடுவது, காதலிப்பது, திருமணம் செய்வது மகிழ்ச்சி. அத்துவுட்டா வேதனை. அதைத்தான் இந்த பாடல் சொல்கிறது என்றார்.

ஜீவா பேசும் போது, ‘இது எனது 25–வது படம். மிகவும் நன்றாக வந்திருக்கிறது. இந்த படத்தின் சண்டைகாட்சி படமாக்கப்பட்ட போது மிகவும் தாமதம் ஆனது. திலீப் சுப்புராயன் சண்டை காட்சியை அமைத்தார். அதை வேகப்படுத்துவதற்காக நானும் சிபியும் கோபத்தில் மோதிக் கொள்வது போல காட்டிக் கொண்டோம்.

உண்மையாக எங்களுக்குள் எந்த தகராறும் இல்லை. மோதலும் இல்லை. நாங்கள் எப்போதும் நெருங்கிய நண்பர்கள். ‘மச்சான்’ என்று சொல்லிக் கொள்வோம். இப்போது அப்படித்தான் இருக்கிறோம். இந்த படத்தில் நடிக்க அழைத்த போது சிபி பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார். படப்பிடிப்பின் போது நாங்கள் இருவரும் ஹன்சிகாவை கிண்டல் செய்வோம் என்றார்.

சிபிராஜ் பேசும்போது, ‘நானும் ஜீவாவும் கல்லூரி தோழர்கள். எங்கள் வீட்டுக்கு அவர் வருவார். அவர் வீட்டுக்கு நான் செல்வேன். நெகட்டிவ் ரோல் என்றாலும் ஜீவா சொன்னதால் நடிக்க ஒப்புக் கொண்டேன்’ என்றார்.

இந்த விழாவில், போக்கிரிராஜா பட இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா, இசை அமைப்பாளர் டி.இமான், இயக்குனர் எஸ்.ஏ.சூர்யா, பாடல் ஆசிரியர் விவேக், ஒளிப்பதிவாளர் ஆஞ்சநேயலு, படவினியோகஸ்தர் காஸ்மோ சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online