தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் இரண்டாம் பாகங்கள்

28rajni1தமிழ் பட அதிபர்கள் மத்தியில் ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. ‘அரண்மனை’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தொடர்ந்து 10 படங்கள் இரண்டாம் பாகங்களாக வர இருக்கின்றன.

கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் முடிவடைந்து திரைக்கு வர இருக்கிறது. ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதில் ரஜினிகாந்த், எமிஜாக்சன் ஜோடியாக நடிக்கின்றனர். ஷங்கர் டைரக்டு செய்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இதுபோல் சண்டக்கோழி, மாரி, கும்கி, கலகலப்பு, கோ, டார்லிங், ஜீன்ஸ் படங்களின் இரண்டாம் பாகங்களும் தயாராகின்றன.

இதன் மூலம் இந்த வருடம் இரண்டாம் பாகத்தில் அதிக படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. ‘சண்டக்கோழி’ படம் விஷால்-மீராஜாஸ்மின் நடிப்பில் வந்து வசூல் அள்ளியது. இதன் இரண்டாம் பாகத்தில் விஷால் ஜோடியாக வேறு கதாநாயகி நடிக்கிறார்.

லிங்குசாமி இயக்குகிறார். மாரி படத்தில் தனுஷ்-காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து இருந்தனர். இரண்டாம் பாகத்தில் தனுசுடன் வேறு கதாநாயகி நடிப்பார் என்று தெரிகிறது.

‘கோ’ முதல் பாகத்தில் ஜீவா-கார்த்திகா நடித்து இருந்தனர். இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்கிறார்கள். டார்லிங் ஜி.வி.பிரகாஷ் நடித்து பேய் படமாக வந்தது. இதன் இரண்டாம் பாகத்தில் கலையரசன் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

கும்கி முதல் பாகத்தில் விக்ரம் பிரபு-லட்சுமி மேனன் நடித்தனர். இரண்டாம் பாகத்துக்கான நடிகர்கள் தேர்வு நடக்கிறது. ‘கலகலப்பு’ படம் விமல், அஞ்சலி நடிக்க சுந்தர்.சி இயக்கத்தில் வந்து வசூல் குவித்தது.

இதன் இரண்டாம் பாகத்துக்கான நட்சத்திர தேர்வு நடக்கிறது. பிரஷாந்த் நடித்த ஜீன்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.

அட்லி இயக்கத்தில் விஜய் ‘தெறி’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online