பிப்ரவரி இறுதியில் கபாலி டீசர் வெளியாகிறது

kabaliரஜினி தற்போது நடித்து வரும் படம் ‘கபாலி’. இப்படத்தை அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘கபாலி’ டீசரை இம்மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கபாலி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 20 அல்லது 25-ந் தேதிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். படக்குழு சென்னை வந்ததும் பிப்ரவரி 25-ந் தேதிக்கு மேல் டீசரை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். ஆகவே, இந்த மாதத்திலேயே ‘கபாலி’ டீசர் வெளிவந்துவிடும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், நாசர் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். சந்தோஷ நாராயணன் இசையமைத்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries