முதன்முறையாக சிம்பு–கார்த்தி நேரடியாக மோதல்

Karthi-and-Simbuசிம்புவுடன் நயன்தாரா, ஆன்ட்ரியா நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை கடந்து திரைக்கு வர தயாராகியிருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. மீதம் உள்ள பாடல் காட்சிகளை முடித்து படத்தை வெளியிட தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

‘இது நம்ம ஆளு’ படத்தை வருகிற மார்ச் 25–ந்தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில், கார்த்தி, நாகார்ஜூனா தமன்னா இணைந்து நடிக்கும் ‘தோழா’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தையும் மார்ச் 25–ந்தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

‘இது நம்ம ஆளு’ படத்தை பண்டிராஜ் இயக்குகிறார். இதில் சிம்பு, நயன்தாராவுடன் இணைந்து நடிப்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

‘தோழா’ படத்தில் கார்த்தி, தமன்னா மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகார் ஜுனாவும் நடிக்கிறார். எனவே இந்த படமும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படமாக உள்ளது. மார்ச் 25–ல் ‘இது நம்ம ஆளு’, ‘தோழா’ படங்கள் திரைக்கு வருவதால், சிம்பு, கார்த்தி படங்கள் முதல்முறையாக மோதும் நிலை உருவாகி இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online