சென்னை 600 028 இரண்டாம் பாகம் உருவாகிறது

dar-motion-to-remake-chennai-28வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் படமாக வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘சென்னை 600 028’. கிரிக்கெட் மற்றும் நட்பை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்தில் ஜெய், சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி, விஜய் வசந்த், விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

2007-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் வெங்கட் பிரபுவுக்கு தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர் எந்த அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களான அஜித், சூர்யா, கார்த்தி ஆகியோரை வைத்து படங்களை இயக்கும் வாய்ப்பு வெங்கட் பிரபு கிடைத்தது.

கடந்த வருடம் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்தின் தோல்விக்கு பிறகு எந்த படங்களையும் இயக்காமல் இருந்து வந்த வெங்கட் பிரபு, தற்போது தனக்கு சினிமாவில் இயக்குனர் அந்தஸ்தை கொடுத்த ‘சென்னை 600 028’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.

முந்தைய பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் இதிலும் நடிக்கவிருக்கின்றனர். இந்த செய்தியை இப்படத்தில் நடித்த நடிகர்களுள் ஒருவரான நிதின் சத்யா உறுதி செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கவுள்ளார்கள். தற்போது இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online