விஜய்யை சந்தித்த விஜய் 60 படக்குழுவினர்

Team-Vijay-60-met-Ilayathalapathyவிஜய் தனது 59-வது படமாக ‘தெறி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தா, ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தில் இப்படம் வெளிவரவிருக்கிறது.

இதைத் தொடர்ந்து விஜய் தனது 60-வது படமாக பரதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்யவுள்ளார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் மற்றும் எடிட்டர் பிரவீன் கே.எல்., ஒளிப்பதிவாளர் சுகுமார், இயக்குனர் பரதன் ஆகியோர் இன்று விஜய்யை அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்துள்ளனர்.

படப்பிடிப்புக்கு முன் விஜய்யை நேரில் பார்த்து அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் தனது மனைவியுடன் விஜய்யை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries