8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு – ஜி.வி.பிரகாஷ்

hqdefaultசிம்பு நடிப்பில் ‘இது நம்ம ஆளு’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், சிம்பு தனது அடுத்த படமாக ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் சிம்பு 3 கெட்டப்புகளிலும், அவருக்கு ஜோடியாக 3 முன்னணி நாயகிகளையும் நடிக்க வைக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சிம்பு நடித்த ‘காளை’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளிவந்தது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு சிம்பு நடிக்கும் படத்திற்கு மீண்டும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கின்றனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. சிம்பு படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்று கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries