அஜித் இடத்தை வளைத்துப் போட்ட பாபி சிம்ஹா

Bobby-Simhaதமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் அஜித். ‘தல’ என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித்துக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

சினிமா உலகில் ‘பாக்ஸ் ஆபிஸ் கிங்’ என வர்ணிக்கப்படும் அஜித்தின் இடத்தை வளர்ந்து வரும் நடிகர் பாபி சிம்ஹா பிடித்துவிட்டார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? பெரிதாக யாரும் யோசிக்க வேண்டாம்…?

கடந்த 2001-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த ‘சிட்டிசன்’ படத்தில் அத்திப்பட்டு என்ற ஒரு கிராமத்தை காட்டியிருப்பார்கள். இந்த கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகளை திருவள்ளூர் அருகேயுள்ள புலிகட் என்ற பகுதியில் செட் போட்டு எடுத்திருந்தனர்.

இந்த படத்திற்கு பிறகு அந்த பகுதியில் யாரும் இதுவரை படப்பிடிப்பு நடத்தவில்லை. இந்நிலையில், தற்போது பாபி சிம்ஹா நடித்து வரும் ‘வல்லவனுக்கு வல்லவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு இந்த இடத்தில் நடைபெற்று வருகிறது. அஜித் நடித்த இந்த இடத்தைத்தான் பாபி சிம்ஹா பிடித்துள்ளார்.

பாபிசிம்ஹாவுடன் ஷிவேதா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online