சமீபகாலமாக மலையாள படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அதன்படி மலையாளத்தில் வெளிவந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படம் தமிழில் ‘36 வயதினிலே’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு பெரிய வெற்றி பெற்றது.
அதேபோல், கமல் நடிப்பில் வெளிவந்த ‘பாபநாசம்’, ஆர்யா, பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த ‘பெங்களூர் நாட்கள்’ ஆகிய படங்களும் மலையாள படத்தின் ரீமேக்தான்.
அந்த வரிசையில் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘சார்லி’ படம் தமிழிலும் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமைய பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை மலையாளத்தில் மார்ட்டின் பிரகட் என்பவர் இயக்கியிருந்தார். துல்கர் சல்மான் ஜோடியாக பார்வதி நடித்திருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் யார் நடிப்பார்? யார் இயக்குவார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.