த்ரிஷா இல்லனா நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைகிறது

gv-prakash-trisha-ilana-nayanthara-10-02-151ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து வசூல் ரீதியாக வெற்றிநடை போட்ட படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆனந்தி, மனிஷா யாதவ் ஆகியோர் நடித்திருந்தனர். நடிகை சிம்ரனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இளைஞர்களை மிகவும் கவர்ந்த இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு சிம்புவை வைத்து புதிய படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி, சிம்புவை 3 கெட்டப்புகளில் நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படம் முடிந்தபிறகு, ஜி.வி.பிரகாஷுடன் மீண்டும் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் ஆதிக்.

இப்படமும் இளைஞர்களை கவரும் வகையில் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளதால், இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என கூறலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online