சுந்தர்.சியுடன் மீண்டும் இணைந்த சதீஷ்

CamLyGpVAAIHhD9சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆம்பள’ படத்தில் விஷால், வைபவ் உடன் காமெடி வேடத்தில் நடித்தவர் சதீஷ். இவர் தற்போது சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் காமெடியனாக நடிக்கவிருக்கிறார்.

இதில் சுந்தர்.சிக்கு ஜோடியாக ஏற்கெனவே பூனம் பஜ்வா தேர்வாகியிருந்தார். இப்படம் மலையாளத்தில் வெளிவந்த ‘வெள்ளிமூங்கா’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். சுந்தர்.சியின் உதவியாளர் வெங்கட் என்பவர் இயக்கவிருக்கிறார்.

இதில் நடிப்பதோடு தயாரிக்கும் பணியையும் சுந்தர்.சி மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் மார்ச் 11-ந் தேதி தொடங்கப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது இன்றே இப்படத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கவுள்ளார். இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு தேர்வு செய்யப்படவில்லை. விரைவில் தலைப்புடன் கூடிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries