சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் வரலட்சுமி

Podaa_Podi_Movie_Team_Press_Meet_03நடிகை சரத்குமார் மகள் வரலட்சுமி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படம் ரசிகர்களிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் பெரும் பாராட்டை பெற்றுத் தந்தது.

இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை நிதின் பணிக்கர் என்பவர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

வரலட்சுமிக்கு தமிழில் ‘போடா போடி’, ‘தாரை தப்பட்டை’ ஆகிய இரண்டு படங்களே வெளிவந்துள்ளது. இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது வரலட்சுமிக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

வரலட்சுமி நடிப்பில் தமிழில் உருவான மற்றொரு படமான ‘மதகஜராஜா’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து நீண்ட காலமாக ரீலீசாகாமல் இருந்து வந்தது.

பல்வேறு பிரச்சினைகளால் முடங்கிக் கிடந்த இந்த படம் வருகிற மார்ச் 11-ந் தேதி வெளியாகப் போவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஷால் நடித்துள்ளார். சுந்தர்.சி.இயக்கியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online