அஞ்சாதே இரண்டாம் பாகம் எடுக்க தயாராகும் மிஷ்கின்

anjathey-2-480x263தமிழ் சினிமாவில் ஏற்கெனவே வெளிவந்து வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்குவது இப்போது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

‘சிங்கம்’ படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்ற நிலையில், தற்போது மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. ‘சென்னை’ 600028’ படமும் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. மேலும், ‘மாரி’, ‘கும்கி’ உள்ளிட்ட படங்களும் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது.

இப்படங்களை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து பெரிய வெற்றியடைந்த ‘அஞ்சாதே’ படத்தையும் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நரேன், அஜ்மல், பிரசன்னா, பாண்டியராஜன், விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்தே, இதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க மிஷ்கின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மிஷ்கின் தற்போது ராம்-பூர்ணா நடிக்கும் ‘சவரக்கத்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், தயாரிப்பு பணியையும் மேற்கொண்டு வருகிறார். இப்படம் முடிந்தபிறகு ‘அஞ்சாதே’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகை, நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என நம்பப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online