பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்

rlராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘காஞ்சனா 2’. இதில் டாப்சி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு லாரன்ஸ் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பைரவா’ படங்களில் நடித்து வருகிறார்.

இப்படங்களை முடித்ததும் அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. பொன்ராம் இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

குறிப்பாக சமீபத்தில் வெளியான ரஜினி முருகன், ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்புடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இவர் அடுத்ததாக உருவாக்கியிருக்கும் கதைக்கு லாரன்ஸ் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கதை சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட லாரன்ஸ் நடிக்க சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries