சூர்யா கதையில் நடிக்கும் ஜெயம் ரவி

jayam-ravi-suriyaசூர்யா நடிப்பில் கவுதம் மேனன் இயக்க ‘துருவ நட்சத்திரம்’ படம் உருவாக தயாராக இருந்தது. இப்படத்துக்கான பூஜை எல்லாம் போடப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்க இருந்த சமயத்தில் ஒருசில காரணங்களால் இப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொண்டார்.

கவுதம் மேனனும் இப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, அஜித்துடன் இணைந்து ‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தையும் எடுத்து முடித்துள்ளார்.

இந்நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ படத்தை மீண்டும் தூசுதட்டி எடுக்க கவுதம் மேனன் முடிவு செய்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என பரிசீலனையில் இருந்த கவுதம் மேனனுக்கு, ஜெயம் ரவி இந்த கதைக்கு சரியாக பொருந்துவார் என நினைத்து அவரிடம் சென்று இப்படத்தின் கதையை கூறினார்.

ஜெயம் ரவியும் ‘துருவ நட்சத்திரம்’ கதையை கேட்டுவிட்டு, அதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த செய்தி ஏற்கெனவே வெளியானதுதான் என்றாலும், இது வெறும் வதந்தி என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்த செய்தியை ஜெயம் ரவி உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து ஜெயம் ரவியிடம் நேரிடையாக தொடர்புகொண்டு கேட்டபோது, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் தான் நடிப்பது உண்மைதான் என உறுதிபட கூறினார். விரைவில் இப்படத்துக்கான பணிகள் தொடங்கவிருக்கிறது.

இதுமட்டுமில்லாமல், இந்த வருடத்தில் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கும் புதிய படத்திலும், சுசீந்திரன் இயக்கும் புதிய படத்திலும் ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார். ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘மிருதன்’ படம் இந்த வாரம் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries