இறைவி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Iraviவிஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி ஆகியோர் நடித்துள்ள படம் ‘இறைவி’. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து படத்திற்கான பின்னணி பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படம் வெளியாகும் தேதியை அறிவித்திருக்கின்றனர். வரும் மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் இப்படத்தை திரையிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். மேலும் இம்மாத இறுதியில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களைப் போல ‘இறைவி’ படமும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries