பத்தாவது முறையாக இணையும் ஆர்யா – யுவன் கூட்டணி

yuvan-shankar-raja-4‘பெங்களூர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து ஆர்யா, ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஆர்யா காட்டுவாசியாக நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஆர்யா நடிப்பில் வெளியான ‘அறிந்தும் அறியாமலும்’, ‘ஒரு கல்லூரியின் கதை’, ‘பட்டியல்’, ‘வேட்டை’, ‘அவன் இவன்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘சர்வம்’, ‘ஆரம்பம்’, ‘யட்சன்’ ஆகிய படங்களுக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். தற்போது புதிய படம் மூலம் பத்தாவது முறையாக ஆர்யா-யுவன் கூட்டணி இணைய இருக்கிறது.

விறுவிறுப்பான அட்வெஞ்சர் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள அதிரபள்ளி மற்றும் கொடைக்கானலில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நடக்க இருக்கிறது. இப்படத்தை ஜீவா தனது சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்க இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries